Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

மருத்துவக் கட்டணங்களுக்கு கடன் வசதிகளை பெற்றுத் தரும் புதிய செயலி ZeroPe அறிமுகம்!

ZeroPe என்பது ஒரு fintech செயலியாகும், இது மருத்துவக் கட்டணங்கள் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான கடன்களை எளிதாக்குகிறது, மேலும் ரூ. 5 லட்சம் வரையிலான நிதியுதவித் தெரிவுகளும் உள்ளன.

மருத்துவக் கட்டணங்களுக்கு கடன் வசதிகளை பெற்றுத் தரும் புதிய செயலி ZeroPe அறிமுகம்!

Wednesday April 17, 2024 , 1 min Read

ZeroPe என்பது ஒரு fintech செயலியாகும், இது மருத்துவக் கட்டணங்கள் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான கடன்களை எளிதாக்குகிறது, மேலும், ரூ.5 லட்சம் வரையிலான நிதியுதவித் தெரிவுகளும் உள்ளன.

பாரத்பே இணை நிறுவனர் அஷ்னீர் க்ரோவர், அசீம் கவ்ரியுடன் இணைந்து, மருத்துவக் கட்டணம் செலுத்துவதில் கவனம் செலுத்தும் புதிய நிதித்தொழில்நுட்ப, அதாவது, ஃபின்டெக் செயலியான ZeroPe ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலியில் உள்ள விளக்கங்களின் படி, இந்த ZeroPe செயலி டெல்லியில் உள்ள ’தேர்ட் யுனிகார்ன்’ நிறுவனத்தால் தயாரித்து அளிக்கப்பட்டதாகும். இது க்ரோவர் மற்றும் கவ்ரியினால் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். முன்னவர் பாரத் பேயிலிருந்து விலகியவர். கடந்த ஆண்டு தேர்ட் யுனிகார்ன் நிறுவனம் கிரிக்கெட் செயலியான Crickpe-ஐ அறிமுகப்படுத்தியது. இது ஒரு ரியல்-மணி பாண்டசி செயலியாகும்.

fintech start-up

ப்ளே ஸ்டோர் விளக்கங்களின் படி, இந்த ஜீரோபே செயலி கடன் செயல்முறையை எளிதாக்குவதற்கும், சுகாதாரக் கட்டணங்களை சிரமமின்றிச் செய்வதற்கும் உதவுவதாகும்.

இந்த தளம் மருத்துவ செலவுகளுக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கும் என்று அதன் இணையதளம் தெரிவித்துள்ளது. கடன் உதவிகளை வழங்க ZeroPe, டெல்லியை தளமாகக் கொண்ட வங்கி சாராத நிதி நிறுவனமான (NBFC), முகுத் ஃபின்வெஸ்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது ஜீரோபே ஸ்டார்ட்அப்பிற்கு கடன் வழங்கும் பங்குதாரராக செயல்படும்.

சமீபத்திய ஆண்டுகளில், QubeHealth மற்றும் SaveIN போன்ற இதே பயன்பாட்டு ஸ்டார்ட்அப்கள் இந்தியாவின் நிதித் தொழில்நுட்பத் துறையில் தோன்றி, மருத்துவ அவசரநிலைகளுக்கு உடனடி நிதியுதவி தீர்வுகளை வழங்குகின்றன. QubeHealth, மருத்துவக் கட்டணங்களுக்கான நிதியுதவியையும் வழங்குகிறது.