இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் ஓலா சேவை மூடல்!
ஓலா கேப்ஸ் இந்தியாவில் விரிவாக்கத்தை மேலும் தொடர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தனது வெளிநாட்டு சவாரி வணிகச் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ஓலா கேப்ஸ் இந்தியாவில் விரிவாக்கத்தை மேலும் தொடர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தனது வெளிநாட்டு சவாரி வணிகச் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக யுவர் ஸ்டோரியிடம் பெயர் குறிப்பிட விரும்பாத ஓலா ஊழியர் ஒருவர் கூறும்போது,
"ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் ஓலா, ஊபர் கேப்ஸிடம் தனது சந்தைப் பகிர்வை இழந்து வருகிறது ஆகவே இந்தியாவில் மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது," என்றார்.
நியூசிலாந்தில் உள்ள பல்வேறு தகவல்களின் படி, ஆக்லாந்தில் உள்ள ஓலா செயலி ஏப்ரல் 12-ம் தேதி முதல் அதாவது, வரும் வெள்ளிக்கிழமை முதல் சவாரி முன்பதிவுகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துகிறது. மே 11, 2024க்குப் பிறகு பிளாட்ஃபார்ம்களில் இருந்து மொத்தமாக ஓலா செயலி நீக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக ஓலா கேப்ஸின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கையில்,
“எங்கள் சவாரி வணிகச் சேவை வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் நாங்கள் இந்தியாவில் லாபம் ஈட்டி வருவதோடு இங்கு முன்னிலையில் இருக்கிறோம். இந்த வளர்ச்சி தனிப்பட்ட இயக்கத்தில் மட்டுமல்ல என்பதோடு போக்குவரத்துச் சேவையின் எதிர்காலம் மின்சாரமயமாகுதல் என்பதால் இந்தியாவில் விரிவாக்கத்திற்கான மகத்தான வாய்ப்பு உள்ளது.”
இந்த தெளிவான கவனத்துடன், நாங்கள் எங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்துள்ளோம், மேலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தற்போதைய வடிவத்தில் எங்கள் சவாரி வணிகத்தை மூட முடிவு செய்துள்ளோம்," என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஓலா நிறுவனம், சமீபத்தில் இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் இ-பைக் டாக்சிகளில் கவனம் செலுத்துவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தது. இது ஏற்கனவே ஒரு சில நகரங்களில் சோதனை சவாரி ஓட்டங்களைத் தொடங்கியுள்ளது மேலும் விரைவில் அதிக பயனர்களுக்கு ‘ஓலா கேப்ஸ்’ செயலியில் இந்தத் தெரிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஓலாவின் ஹோல்டிங் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜிஸ், 2023 நிதியாண்டில் ரூ.772.25 கோடி நஷ்டத்தையும் ரூ.2,799.38 கோடி வருவாயையும் ஈட்டியுள்ளது.
இது ஊபர் மற்றும் வளர்ந்து வரும் மின்சார வாகன சேவை நிறுவனங்களான, ‘ப்ளூஸ்மார்ட்’ (BluSmart) போன்றவற்றிலிருந்து கடுமையான போட்டியை ஓலா எதிர்கொண்டு வருகிறது. அவை மின்சார சவாரிகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. பாதுகாப்பு மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்காக சில வாடிக்கையாளர்கள் சந்தையில் புதிதாக நுழைந்தவர்களை-குறிப்பாக BluSmart மற்றும் QuickRide-போன்றவனவற்றை அதிகம் விரும்புகின்றனர்.
இவற்றுக்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் கட்டணங்களை உயர்த்தக் கோரி ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் கடும் கோடைக்காலத்தில் ‘ஏ/சி போட மாட்டோம்’ என்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.